மின்சாரம் பாய்ந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு வாட்டார் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் முடிந்தும் குழந்தை இல்லை. இதில் சங்கர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வீட்டில் மின் இணைப்பு இல்லாததை அறிந்து அதனை சங்கர் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது வயரில் மின்சாரம் பாய்வதை அறியாமல் சங்கர் அதை பல்லால் கடித்து இழுத்துள்ளார்.
இதனால் எதிர்பாராதவிதமாக சங்கர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் சங்கரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.