Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுடன் விசாரணை…!!

சேலம் மாவட்டம் கந்தம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது.

கந்தம்பட்டி உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன புதுப்பித்தல் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் லஞ்சம் ஒழிப்பு காவல்துறையினர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது கணக்கில் வராத ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 300 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள்  ராஜேஷ்கண்ணா மற்றும் செந்தில் ஆகியோருடன் நடத்திய விசாரணையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த அலுவலக உதவியாளர் சரவணன் மற்றும் இடைத்தரகர்கள் ஆன சுந்தரம், ஜெயச்சந்திரன், தனசேகர் ஆகியோர் இடம் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

Categories

Tech |