தமிழகத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து நிலங்களை சட்டவிரோதமாக அபகரித்ததாக மத்திய அமலாக்கத்துறையிடம் சென்னை ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது புகார் வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான வேப்பேரி,எழும்பூர்,என்.எஸ்.சி.போஸ் .சாலை போன்ற 10 இடங்களில் அமலாக்கத் துறையின் அதிகாரிகள் இன்று காலை அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய ரிசர்வ் படை மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Categories
வட்டிக்கு பணம் கொடுத்து நிலங்கள் அபகரிப்பு…. சென்னையில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை….!!!!
