Categories
சினிமா தமிழ் சினிமா

“வாத்தி கம்மிங்” பாடலை கேட்டு குழந்தை செய்யும் செயல்… வைரலாகும் வீடியோ….!


தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் “வாத்தி கம்மிங்” பாடலைக் கேட்டு குழந்தைதுள்ளி குதிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ் ஒருவராக திகழ்கிறார். மாநகரம் மற்றும் கைதி என அவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களும் பெரும் வெற்றி பெற்றதால் பெரிய அளவில் பிரபலமானார். மேலும் கார்த்திக் நடிப்பில் இவர் இயக்கிய கைதி திரைப்படம் மாறுபட்ட கதைகளத்தில் உருவானதால் மக்களிடையே பேராதரவைப் பெற்றதோடு சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு முடிந்தவுடன் திரைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் டிவிட்டரில் ரசிகர் ஒருவர் “வாத்தி கம்மிங்” பாடலை கேட்டு துள்ளிக் குதிக்கும் குழந்தையின் வீடியோவை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த லோகேஷ் கனகராஜ் அந்த பதிவில் “சோ க்யூட் ஷீ இஸ்” என கமெண்டில் பதிவிட்டுள்ளார். தளபதி விஜய் ரசிகர்களால் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |