Categories
சினிமா தமிழ் சினிமா

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…. ஆதாரங்களை சமர்ப்பித்த விக்கி-நயன்?…. வெளியான தகவல்….!!!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தனர். இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்று அறிவித்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது தான் தற்போதைய ஹாலிவுட் ஹாட்பிட்டாக உள்ளது. இவர்கள் இருவரும் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு நிறைய சட்டவிதிகள் இருக்கும்போது இவர்கள் குழந்தை பெற்றது சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுந்து, சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

இதுகுறித்து நயன்தாரா,விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மூன்று பேர் கொண்ட சுகாதார குழுவினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விசாரணை குழுவிடம் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி சமர்ப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கடந்த டிசம்பர் மாதமே வாடகை தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்ட அமலுக்கு வந்தது என்று அது தங்களை கட்டுப்படுத்தாது என்று அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |