திண்டுக்கல்லில் குடும்ப வறுமை காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை கைவிட்டு கொரோனா சமூக பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவனுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் உதவி செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் உள்ள குளக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் திரு. ஜெகதீஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது தந்தையார் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக கல்லூரியில் படித்து வந்த ஜெகதீஷ் தனது படிப்பை மேலும் தொடர முடியாமல் நிறுத்திவிட்டார்.
பின்னர் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நல பணியில் இளைஞர் நாடாளுமன்ற அமைப்பினருடன் களப்பணியில் ஈடுபட்டு வந்தார். களப்பணியில் ஈடுபட்டு வந்த பொழுது ஜெகதீஷ் பற்றியும் அவரது குடும்ப சூழ்நிலை மற்றும் படிப்பை பாதியில் நிறுத்தியது பற்றியும் திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு பிரகாஷ் குமார் தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக ஜெகதீசை நேரில் சந்தித்து அவர் மீண்டும் கல்லூரியில் படிப்பதற்கு கல்விக் கட்டணத்தையும் செலுத்தி உற்சாகப்படுத்தினார்.