Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல் செய்வோருக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதிலும் அரசு மற்றும் அரசு சாரா என்ற அனைத்து விதமான நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக வருமானம் பெறும் அனைவருமே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இந்த வருமான வரியானது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதனிடையில் இந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்குரிய ITR போர்ட்டலில் சிறிது தொழிநுட்ப சிக்கல் ஏற்பட்டதால் முன்பே இரண்டு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது டிச.31-ம் தேதி வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாளாக இந்திய வருமான வரித்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. இந்த வருமான வரி தாக்கல் செய்வதற்கான நினைவூட்டல்கள் வருமான வரி செலுத்துவோருக்கு SMS, மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே வருமான வரி தாக்கல் செய்ய இன்னும் சில நாட்களே இருப்பதால் அனைவரும் விரைந்து தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு தேவையான முக்கியமான ஆவணங்கள் தொடாபான விபரங்களை பார்க்கலாம்.

 படிவம் 16

படிவம் 16 என்பது மூலத்தில் இருந்து கழிக்கப்பட்ட வரி (TDS) சான்றிதழ் ஆகும். இந்த படிவம் அனைத்து சம்பளதாரர்களுக்கும் ITR தாக்கல் செய்வதற்கான ஒரு முக்கியமான ஆவணமாக இருக்கிறது. இதில் 2 பகுதிகள் உள்ளது. அவை பகுதி A,B ஆகும். பகுதி A-யில் இந்த நிதியாண்டில் கழிக்கபட்ட வருமான வரி விபரம் அடங்கி இருக்கும். பகுதி B: பணியாளரின் மொத்த சம்பளத்தின் பிரிவு வாரியான சான்றிதழ் அடங்கி இருக்கும்.

வட்டி வருமான சான்றிதழ்

சம்பளத்தை தவிர்த்து, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் இருந்து சேமிப்பு கணக்கு வைப்பு மற்றும் நிலையான வைப்பு (FD) ஆகிய பல்வேறு வட்டி தரும் முதலீடுகளிலிருந்து தனிநபர் வருமானம் பெறுகின்றனர். அத்தகைய சேமிப்புக் கணக்கில் இருந்து பெறப்பட்ட வட்டிக்கு வருமான வரிச் சட்டத்தின் 80TTA பிரிவின் கீழ் விலக்கு பெறலாம்.

வரி சேமிப்புக்கான முதலீட்டு சான்றிதழ்

முந்தைய நிதியாண்டில் தங்களளுடைய வரி சேமிப்பு முதலீட்டு சான்றுகளை உரிய துறையில் சமர்ப்பிக்க முடியாதவர்கள் வரி விலக்கு பெறுவதற்கு வருமான வரித் துறைக்கு நேரடியாக அறிவித்து சமர்ப்பிக்க வேண்டும். இதில் அனைத்து வகையான முதலீடுகளும் அடங்கும். அதாவது இதன் மூலமாக 80C மற்றும் 80Dன் கீழ் வரி விலக்கு பெற முடியும்.

படிவம் 26A S

படிவம் 26AS என்பது வருமான வரித் துறையால் உருவாக்கப்பட்ட வருடாந்திர ஒருங்கிணைந்த வரி அறிக்கை ஆகும். அனைத்து வரி செலுத்துபவர்களும் தங்கள் பான் எண்ணைப் பயன்படுத்தி வருமான வரி இணையதளத்தில் இருந்து இதை எளிதாக பெறலாம்.

Categories

Tech |