சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73 வது பிறந்த நாளை தனது பேரன்களோடு கொண்டாடியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் 73-வது பிறந்த நாளை தனது பேரன்களான லிங்கா, யாத்ரா ஆகியோருடன் கொண்டாடியுள்ளார். சென்னையில் மழை, புயல் காரணமாக ரசிகர்கள் தொடர்ந்து தன்னை சந்திக்க வருவதை தவிர்ப்பதற்காகவே கேளம்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன் வாய்ப்புகளை தேடி அலைந்து கொண்டிருந்தபோது வருமானம் இல்லாமல் சில நாட்கள் ஒருவேளை மட்டுமே சாப்பிடுவாராம்.
அந்த சமயம் சென்னை அண்ணா மேம்பாலம் அருகிலுள்ள உட்லண்ட்ஸ் உணவகத்தில் இரவு வேளையில் கிடைக்கும் காசை வைத்து சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த உணவகத்தில் சர்வராக வேலை பார்த்த நாராயண ராவ் என்பவர் ரஜினியின் வறுமையை அறிந்து அவர் கொடுக்கும் பணத்திற்கும் மேல் அதிகமாக சாப்பாடு கொடுத்துள்ளார். ரஜினிகாந்திடம் சில சமயத்தில் பணம் இல்லாததை அறிந்தும் அவருக்கு சாப்பாடு கொடுத்துள்ளார். இது குறித்து உணவகத்தில் கேட்டபோது அவர் பணம் கொடுக்காவிட்டால் எனது சம்பளத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார் நாராயண ராவ்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் முன்னணி நடிகரான பின் நாராயணராவை தேடியுள்ளார். அவர் உடுப்பியை சேர்ந்தவர் மட்டும் தான் என்று ரஜினிக்கு தெரியும். பின்னர் தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் மூலம் உடுப்பி நாராயண ராவை தேட சொல்லியுள்ளார். அவர் வயதான நிலையில் வறுமையில் உடுப்பியில் வாழ்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அறிந்த ரஜினி சஸ்பென்ஸாக நாராயண ராவ் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் நாராயண ராவ் ரஜினியை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். நாராயணராவின் குடும்பநிலையை அறிந்த ரஜினிகாந்த் அவரின் பெயரில் பெரிய தொகையை வங்கியில் போட்டு அதன் மூலம் வட்டி கிடைக்குமாறு செய்துள்ளார். மேலும் நாராயணராவின் மகனுக்கு ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த ஐடி கம்பெனியின் மூலம் வேலை வாங்கி கொடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.