வருமான வரிக்கான வட்டியை செலுத்துவதில் விலக்கு அளிக்க கோரிய நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் 2007, 2008,2009 ஆகிய 3 ஆண்டுகளுக்கான வரியாக ரூபாய் 3,11,96,000த்தை செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை கடந்த 2011ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்தார். அதில் வருமானத் துறையின் மேல் முறையீட்டு தீர்வானது மூன்று ஆண்டுகளுக்குப் பின் அறிவிக்கப்பட்டதால் என்னுடைய வருமான வரிக்கான வட்டியை கொடுப்பதில் விலக்கு அளிக்க வேண்டும்” என்று அவரின் தரப்பிலிருந்து கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆனால் வருமான வரி மதீப்பிடு செயல்களில் சூர்யா முழு ஒத்துழைப்பு கொடுக்காததால் அவர் வட்டி விலக்கு பெற உரிமை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருமான வரித்துறையின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அவர்கள் சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக சமீபத்தில் இது போன்று விஜய் மற்றும் தனுஷின் வரி விலக்கு வழக்கு விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.