பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தி,ல் தில் ராஜு தயாரிப்பில் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், சாம் மற்றும் குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதன் பிறகு வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி மற்றும் அம்மா சென்டிமென்ட் பாடல் போன்றவைகள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாசு படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜனவரி 2-ஆம் தேதி வாரிசு படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை போஸ்டருடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.