Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வரிசையாக 4 ஆண்கள்…. ஷிப்ட் முறையில் குடித்தனம்…. திருமணமாகாத ஆண்களே குறி…. பகீர் சம்பவம்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்வதற்காக தரகர் பெண் பார்த்துள்ளனர். அப்போது தஞ்சாவூர் அய்யம்பேட்டை சேர்ந்த சரிதா என்ற பெண் இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் சரிதா ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அவரது பெற்றோர் இறந்துவிட்டதாக தரகர் தெரிவித்தார். இந்த திருமணத்திற்கு தரகர் 1,20,000 கமிஷன் கேட்டுள்ளார். அதன் பிறகு கடந்த 20ஆம் தேதி இருவருக்கும் ஒரு கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஒரு நாள் மனைவி சரிதாவின் மொபைலில் வாட்ஸ் அப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜை பார்த்த சரவணன் அதிர்ச்சி அடைந்தார். அதில், எங்கு இருந்து வெளிய வர முடியவில்லை என்றும் சரவணனிடம் பெரிய தொகை எதுவும் இல்லை என்றும் சரிதா கூறியுள்ளார். மேலும் தனக்கு அடுத்ததாக வயதான ஒருவரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு, அந்த திருமணம் முடிந்தபின் அவரிடம் பிரிந்து வந்து மீண்டும் சரவனிடமே இருக்க விரும்புவதாகும் தெரிவித்தார்.

இது குறித்து சரவணன் நண்பர்களிடம் கூறியுள்ளார். நண்பர்கள் கொடுத்த ஐடியா படி தனது நண்பர் ஒருவருக்கு பெண் பார்ப்பதாகவும் ஏதாவது பெண் இருந்தால் கூறுமாறு தனது மனைவியிடம் சரவணன் கூறியுள்ளார். அவர் தனது பெரியம்மாவிடம் கூறி அவர் வேறொரு பெண்ணை அறிமுகம் செய்துள்ளனர். அதன் பிறகு அவர்களை இங்கே அழைத்து வர சரவணன் கூறினார். இதனையடுத்து பெண் தரகர் உள்ளிட்ட அனைவரும் வந்துள்ளனர். அப்போது மனைவி உள்ளிட்ட அனைவரையும் கையும் களவுமாக காவல்துறையினிடம் சரவணன் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து விசாரணையின் போது சரிதா என்பவர் இதுவரை நான்கு பேரை திருமணம் செய்து அவர்களிடமிருந்து விலகி வந்து தற்போது சரவணனை திருமணம் செய்தது தெரியவந்தது. அவர்களுடன் சுழற்சி முறையில் குடும்பம் நடத்தி இருக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் மோசடி செய்த கும்பலை கைது செய்த போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |