உலகிலுள்ள மிகப்பெரிய நாடுகளில் இந்தியா தான் இறக்குமதிக்கு அதிகமான வரியை வசூலிக்கும் நாடாக திகழ்கிறது என்று டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல் விலையை போல் டீசல் விலையும் ரூபாய் 100 தொடவுள்ளது. இதனால் பொதுமக்கள் பைக், கார் போன்ற மோட்டார் வாகனங்களை விட்டுட்டு எலக்ட்ரானிக் வாகனங்களின் மீது ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார்கள்.
இவ்வாறான சூழலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் இந்திய நாட்டில் பிரபல எலக்ட்ரானிக் கார் நிறுவனமான டெஸ்லாவை அறிமுகம் செய்யுமாறு பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த டெஸ்லா நிறுவன தலைவர் உலகிலுள்ள மிகப் பெரிய நாடுகளில் இந்தியாதான் இறக்குமதிக்கு அதிகமாக வரியை வசூலிக்கும் நாடாக திகழ்கிறது.
ஆகையினால் தான் இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தை கொண்டு வருவதற்கு சிக்கலாக இருப்பதாக நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதற்கிடையே டெஸ்லா நிறுவனம் இந்திய அரசாங்கத்திற்கு எலக்ட்ரானிக் கார்கள் குறித்த இறக்குமதி வரியை குறைக்குமாறு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.