Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாரத்தில் 2 முறை இதை சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லும் தேவை இருக்காது….!

ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசக் கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும்…!

 

  •  முருங்கைக்கீரையில் வைட்டமின் “சி” அதிகம் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
  • முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து தோல் நோய்கள் வராமல் தடுக்கும்.
  • இதில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்கும்.
  • தினமும் 100 கிராம் அளவில் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வந்தால் உங்களின் கண் பார்வை கூர்மையாக இருப்பதோடு பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்.
  • வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வந்தால் ரத்த அழுத்தம் சீராகி இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.
  • முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உங்களுக்கு மலச்சிக்கல் மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
  • முருங்கை கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள அதிக அளவு இரும்பு சத்து உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து இரத்த சோகை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

 

 

  • முருங்கைக்கீரை பொரியலுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கிளறி 40 நாட்கள் இதுபோன்று தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து உடல் நல்ல வலிமை அடையும்.
  • முருங்கைக் கீரையை உருவி காம்புகளை நறுக்கி மிளகு சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் கை கால் வலிகள் நீங்கும், பல் ஈறு சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்.
  • இதற்கு ஆண் பெண் இருபாலரும் முருங்கை இலைகளை வேகவைத்து சூப் போன்ற செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை குறைபாடு நீங்கும்.
  • பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி குணமடைய சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும் போது ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
  • பெண்கள் முருங்கைக் கீரையை வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்.
  • குழந்தை பெற்ற தாய்மார்கள் முருங்கைக் கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

Categories

Tech |