வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் கிராமத்தில் வசித்து வருபவர் மகேஷ். இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே மகேஷ் சிவசத்யா என்னும் பெண்ணை 2015ஆம் ஆண்டு மகேஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றார்கள். திருமணமான நாளில் இருந்து மகேஷ் மற்றும் அவர் குடும்பத்தில் இருப்பவர்கள் சிவசத்யாவை வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிவசத்யா தன் பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்பு தன் அறைக்கு சென்ற சிவசத்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.