‘வரனே அவஷ்யமுண்டு’ படத்தில் அவமதிக்கும் காட்சியை நீக்க வேண்டும் என்று படக்குழுவினருக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் தான் துல்கர் சல்மான். இவரும் அப்பாவை போலவே சிறப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்துள்ள படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. அனூப் சத்யன் இயக்கும் இந்தப் படத்தில், பிரபல நடிகர் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் சில நாட்களுக்கு முன்பு டிஜிட்டலில் வெளியானது.
இந்நிலையில் இந்தச் சர்ச்சை தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, வரனே அவஷ்யமுண்டே’ என்னும் மலையாள படத்தில் மேதகு பிரபாகரன் அவர்களை அவமதிக்கும் காட்சி இடம்பெற்றிருப்பது இப்படக் குழுவினரின் இழிபோக்கை வெளிப்படுத்துகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். நடிகர் துல்கர்சல்மான் மன்னிப்புக் கேட்டுள்ளார் என்றாலும், அக்காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
' வரனே அவஷ்யமுண்டே' என்னும் மலையாள படத்தில் மேதகு பிரபாகரன் அவர்களை அவமதிக்கும் காட்சி இடம்பெற்றிருப்பது இப்படக் குழுவினரின் இழிபோக்கை வெளிப்படுத்துகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். நடிகர் துல்கர்சல்மான் மன்னிப்புக் கேட்டுள்ளார் என்றாலும், அக்காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் pic.twitter.com/yiIXWlQCKP
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 28, 2020