வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மனைவி விஜயா சென்ற 2010 வருடம் இறந்துவிட்டார். இதை தொடர்ந்து அவரின் பெயரில் தேசிய வங்கி ஒன்றில் 27 ஆயிரத்துக்கு நகை கடன் வாங்கி இருந்ததால் அதனை மீட்க வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டது. இதனால் இளங்கோவன் தனது குடும்ப அட்டை மற்றும் இறப்புச் சான்றிதழ் நகலுடன் கிராம நிர்வாக அலுவலர் சுப்ரமணியிடம் மனு கொடுத்து இருக்கின்றார்.
இதை பார்த்த கிராம நிர்வாக அலுவலர் வாரிசு சான்றிதழ் பெற ஆட்சியபனை இல்லை. ஆனால் கையொப்பமிட 2000 லஞ்சம் கேட்டிருக்கின்றார். பணம் தர விருப்பம் இல்லாத இளங்கோவன் வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கின்றார். அதன் பேரில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் லஞ்சம் பெரும் பொழுது கையும் களவுமாக கைது செய்தார்கள். இந்த வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கிராம நிர்வாக அலுவலர் சுப்ரமணியனுக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும் 4000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.