வான்வெளி தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்த போரானது இறுதி கட்டத்தில் உள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டை சிறிய அரசு படையினர் காப்பற்றுவதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சிரியாவில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தெற்கு சிரியாவில் அமெரிக்கா படையினரால் பயன்படுத்தும் தளமானது தாக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இது குறித்து மத்திய செய்தித் தொடர்பாளரும் இராணுவ மேஜரான ஜான் ரிக்ஸ்பீ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “வடக்கு சிரியாவில் இன்று அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவரான அப்துல் ஹமீத் அல்-மாதர் கொல்லப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார் .
மேலும் இவ்வாறு இவர் கொல்லப்பட்டது பயங்கரவாத அமைப்பின் உலகளாவிய திட்டங்கள் மற்றும் திறனை சீர்குலைத்துவிடும். குறிப்பாக அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் அல்கொய்தா தொடர்ந்து அச்சுறுத்தலை அளித்து வந்தது. அதிலும் சிரியாவை, அல்கொய்தா கிளர்ச்சி செய்யவும் வெளியில் உள்ள துணை அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் அவர்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டிக்கொடுக்கவும் பாதுகாப்பான வசிப்பிடமாக பயன்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.