சிஎஸ்கே அணியில் மொயின் அலிக்கு பதிலாக, புதிய வீரர் களம் இறங்க உள்ளார்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் ,சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே பீல்டிங் செய்தபோது, மொயின் அலிக்கு காயம் ஏற்பட்டது .
இதனால் அடுத்து வரும் போட்டிகளில், மொயின் அலி அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது . இது பற்றி ஆலோசனை செய்த சிஎஸ்கே நிர்வாகம் ,மொயின் அலிக்கு பதிலாக மாற்று வீரரை இறக்க முடிவு செய்தது. எனவே மொயின் அலிக்கு பதில், மாற்று வீரராக கிருஷ்ணப்பா கவுதம் விளையாட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது .