வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பா.ம.க.வினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள குப்பிச்சிபாளையத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பா.ம.க.-வை சேர்ந்தவர்கள் மற்றும் வன்னியர் சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளரான அபிமன்னன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்க மாநில அமைப்பு துணைத்தலைவர் எ.ஜெகதீஷ், ஒலகடம் சேகர், டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட துணைச்செயலாளர் கே.எம்.சரவணன், பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத்தலைவர் சர்வேயர் வேலு போன்றோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த போராட்டத்தில் கட்சியின் மாநில முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் எஸ்.சி.ஆர்.கோபால், வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன்., மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சரவணன் உட்பட கட்சி நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சமுதாய மக்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.