பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ரீமேக் படத்தில் நடிக்க நடிகை வனிதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் தற்போது அனல் காற்று, 2 கே அழகான காதல் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் வனிதா தற்போது மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான “அந்தாதூன்” திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஆகையால் இப்படத்தை தமிழில் “அந்தகன்” என ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரசாந்த் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை வனிதா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.