பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிக்பாஸ் வனிதா அஜித்தை பற்றி கூறியுள்ளார்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அடாவடித்தனம் செய்துகொண்டிருந்த வனிதா அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் பேட்டி கொடுத்த பொழுது அஜித்தை பற்றிய கேள்வி எழும்பியது. அதற்கு பதில் அளித்த வனிதா
“உங்களுக்கு மட்டும் தான் அவர் தல எனக்கு அஜித்தாக இருந்தது முதல் அவரை தெரியும் அவர் சூப்பர் ஜென்டில்மேன். மனைவிக்கு நல்ல கணவராகவும் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாகவும் இருப்பவர். ஆரம்பத்திலிருந்து இன்றுவரை என்னிடம் ஒரே மாதிரிதான் பழகுகிறார். இந்த உயரத்தை அடைந்த பின்பும் அவரிடம் எந்த மாற்றத்தையும் நான் பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.