Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் யானைகள்…. வனத்துறையினரை முற்றுகையிட்ட மக்கள்…. நீலகிரியில் பரபரப்பு….!!

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் 2 காட்டு யானைகள் கோழிகொல்லி கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள வீடுகளை முற்றுகையிட்டுள்ளது. இந்நிலையில் காட்டு யானைகள் பொள்ளி என்பவரது வீட்டு சுவரை இடித்ததால் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் மீது சுவர் விழுந்து விட்டது. இதனை அடுத்து ஆதிவாசி மக்கள் காட்டு யானைகளை விரட்டியடித்த பிறகு படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் ஆதிவாசி கிராமத்திற்குள் நுழைந்த வனத்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கூடலூர் தாசில்தார் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது சேதமான வீட்டுக்கு இழப்பீடு தரவேண்டும் எனவும், காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க பெரிய அகழி வெட்ட வேண்டும் எனவும் ஆதிவாசி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |