Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வேன்-கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேன் – கார் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராக்கியாபாளையம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் அதே பகுதியில் வசிக்கும் இவரது உறவினரான கார்மேகம், கார்மேகத்தின் தாயார் பழனியம்மாள், பாக்கியலட்சுமி, தேன்மொழி, கலைமணி, ராமச்சந்திரன் ஆகியோருடன் கோவை மாவட்டத்திலுள்ள குளத்துப்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வேனில் சென்றனர். இதனையடுத்து அங்கு சாமி கும்பிட்டுவிட்டு அதிகாலை மீண்டும் திருப்பூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் வேன் பல்லடம் – பொள்ளாச்சி சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது கார்த்திக் முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கார்த்திக் ஓட்டி வந்த வேன் எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்நிலையில் பலத்த காயமடைந்த கார்த்திக், கார்மேகம் 2 பெரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வேனுக்குள் இருந்த பழனியம்மாள், பாக்கியலட்சுமி, தேன்மொழி, கலைமணி, ராமச்சந்திரன் மற்றும் காரில் வந்த பாதிரியார் யூஜின் டோனி, பெலிக்ஸ், கலையரசன் ஆகியோரும் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 8 பேரையும் உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் கார்த்திக் மற்றும் கார்மேகம் ஆகியோரின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Categories

Tech |