காய்கறி ஏற்றி கொண்டு வரும்போது வேன் கவிழ்ந்து 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அருண், ஸ்டாலின் ஆகிய இருவரும் மதுரையில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு ஒரு வேனில் வந்துகொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது குன்னத்தூர் வளைவில் எதிர்பாராதவிதமாக வேன் கவர்ந்துள்ளது.
இதில் வேனில் வந்த அருண், ஸ்டாலின் மற்றும் டிரைவரான முத்துராஜ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.