சென்னையில் இரவு நேரத்தில் கத்தியை காட்டி வழிப்பறி செய்து வந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள தி. நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அனகாபுத்தூரில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.நேற்று இரவு வழக்கம்போல் வெங்கடேசன் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி வெங்கடேசனிடமிருந்தது செல்போன் மற்றும் அவருடைய இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர் . இந்நிலையில் வழிப்பறியில் ஈடுபட்டது அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் விவேக் என்பது தெரியவந்தது. அதனால் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.