Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர்கள் …. விசாரணையில் வெளிவந்த உண்மை …. போலீசார் அதிரடி நடவடிக்கை …!!!

வழிப்பறி வழக்கில் கைதான 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர் .

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த கமல் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சம்பவ தினத்தன்று வேலையின் காரணமாக தன்னுடன் பணிபுரியும் நபர்களுடன் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு  முருகஞ்சேரி அருகே வந்து கொண்டிருந்தபோது அவர்களை வழி மறித்த மர்ம நபர்கள் கத்திமுனையில் மிரட்டி அவர்களிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து மணவாளநகர் போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் லோகேஷ் , முருகன் என்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதற்கு முன்பாகவே இருவரும் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய  நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் மாவட்ட ஆட்சியர் டாக்டர்  ஆல்பி ஜான் வர்கீசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்  இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Categories

Tech |