Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்பிக் கேட்டது தப்பா….? சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் சுதந்திர ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுதந்திர ராஜ்குமார் தனது நண்பர் சந்தோஷிடம் மோதிரம் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்பின் சந்தோஷிடம் சுதந்திர ராஜ்குமார் மோதிரத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கிடையே சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களான காளீஸ்வரன், மனோஜ் ஆகியோருடன் சேர்ந்து மானாமதுரை ரயில்நிலையத்தில் காரில் நின்று கொண்டிருந்த சுதந்திர ராஜ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சுதந்திர ராஜ்குமார் காயமடைந்துள்ளார். இதுகுறித்து சுதந்திர ராஜ்குமார் மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுதந்திர ராஜ்குமாரை தாக்கிய 3 வாலிபர்களை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |