Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உரிய நடவடிக்கை இல்லை” வாலிபர் தற்கொலை முயற்சி…. கைது செய்த காவல்துறையினர்….!!

உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் திராவிடச் செல்வன் என்பவர் வசித்துவருகின்றார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் திராவிட செல்வன் சூப்பிரண்டு போலீஸ் அலுவலகத்தின் முன்பு உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக சத்தமிட்டுள்ளார்.

இதனைப்பார்த்த அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் அவரைப் பிடித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் கலையரசன் திராவிட செல்வன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கு முயன்ற திராவிட செல்வனை கைது செய்துள்ளனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |