ஆன்லைனில் விளையாடுவதற்கு வாலிபரிடம் பணம் அபகரித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் வசிக்கும் சகாய ஜோசப் கிளிண்டன் என்ற வாலிபர் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி 13ஆம் தேதி ஆன்லைனில் “பிரீ பையர்” என்ற விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சகாய ஜோசப் கிளிண்டனிடம் ஆன்லைன் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்பு கொண்டு அந்த நபர் இந்த விளையாட்டுக்கு உரிய ஐ.டி. தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அதற்கு 22 ஆயிரம் செலுத்த வேண்டும் என கேட்டுள்ளார். அதன்பின் சகாய ஜோசப் கிளிண்டன் ஆன்லைன் செயலி மூலம் அவருக்கு பணத்தை செலுத்தி இல்லாத ஆனால் சகாக்களுடன் அவரை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எந்தவித பதிலும் அளிக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
இதுகுறித்து சகாய ஜோசப் கிளிண்டன் நெல்லை மாவட்ட காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பணத்தை வாங்கி ஏமாற்றியவர் சென்னை சித்தலபாக்கம் பகுதியில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கோபால கிருஷ்ணனை கைது செய்து அவரிடமிருந்து ஏ.டி.எம். கார்டு, வங்கி பாஸ் புத்தகம், செல்போனை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பாராட்டினார். மேலும் அவர் இது போல ஆன்லைன் விளையாட்டுக்காக அடையாளம் தெரியாத நபரிடம் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.