வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணம்பாக்கம் கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் செலவு செய்து மது அருந்தியுள்ளார். இதனால் பெற்றோர்கள் விஜயகுமாரை கண்டித்துள்ளனர்.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த விஜயகுமார் விஷத்தை குடித்துள்ளார். இதனை பார்த்த பெற்றோர் விஜயகுமாரை போளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக விஜயகுமாரை வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.