Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதாக கூறிய வாலிபர்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆராய்ச்சிப்படி பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துராஜ் கடந்த 17-ஆம் தேதி ஒரு சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முத்துராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அந்த சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Categories

Tech |