வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பாட்டப்பத்து பகுதியில் இசக்கி தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுந்தர்ராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இசக்கி தாஸ் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், டவுன் உட்கோட்ட போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் சுந்தர்ராஜனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிற்கு பரிந்துரை செய்தனர். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் சுந்தரராஜனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் சுந்தர்ராஜனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர்.