கருந்திரியை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் கருந்திரி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வீடு வீடாக சென்று காவல் துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பிறகு அப்பகுதியில் வசிக்கும் வேல்முருகன் என்பவரின் வீட்டில் 200 குரோஸ் கருந்திரிகளும், செல்வராஜ் என்பவரின் வீட்டில் 300 குரோஸ் கருந்திரிகளும் இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வராஜ் மற்றும் வேல் முருகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.