கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டரான ராமநாதன் முன்னிலையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பவர் கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் பெருமாளை மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சா மற்றும் 2700 ரூபாய் பணம் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெருமாளை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.