Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த டிரைவர்…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வடுகசாத்து கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உதயகுமார் ஆரணி-வாழப்பந்தல் சாலையில் சென்று கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.6,000-ஐ பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து உதயகுமாரின் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ஆரணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் வழிப்பறி செய்த நபர் சுடுகாட்டு பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஆரணி பகுதியில் வசிக்கும் சிவா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் உதயகுமாரை கைது செய்ததோடு அவரிடமிருந்த 4 பவுன் செயின், மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.2000 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் சிவா வழிப்பறி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |