Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா, சமந்தாவுடன் காதல் செய்யும் விஜய் சேதுபதி..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக திகழும் நயன்தாரா, சமந்தா ஆகியோர் விஜய்சேதுபதியுடன் இணைந்திருக்கும் முக்கோண காதல் கதை பற்றிய அறிவிப்பு காதலர் தின ட்ரீட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காதலர் தினத்தில் தனது அடுத்த ரெமாண்டிக் படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ். இந்த ஆண்டின் காதலர் தினத்தன்று விஜய்யின் குட்டி ஸ்டோரி, ரைசாவின் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ் விருந்து அமைந்த நிலையில், தற்போது முதல் முறையாக தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களான நயன்தாரா, சமந்தா ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், காதலர் தின வாழ்த்துகள். மீண்டும் இந்த அன்பானவர்களுடன் இணைந்துள்ளேன் என்று குறிப்பிட்டு காத்துவாக்குல் இரண்டு காதல் என்று தனது புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்துக்கு அனிருத் இசையமைக்க செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் மற்றும் ரவுடி பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது

அழகான ரொமாண்டிக் காதல் கதையாக உருவாகும் இந்தப் படம் ஆண்டின் இறுதியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மல்டி ஹீரோக்கள் சப்ஜெக்டை பார்த்து ரசித்த தமிழ் ரசிகர்களுக்கு இந்த மல்டி ஹீரோயின் கதைக்களம் தற்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |