உலகம் முழுவதும் உள்ள காதலால் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது. 19 நூற்றாண்டு வரைக்கும் மேற்கத்திய நாடுகளில் மட்டும்தான் காதலர் தினம் பரவலாக கொண்டாடப்பட்டது. ஆனால் 2௦ நூற்றாண்டில்தான் காதலர் தினத்தை உலகம் முழுவதும் கொண்டாட ஆரம்பித்தார்கள். குறிப்பாக இந்தியாவிலும் கூட இன்று கிராமப்புறங்கள் வரைக்கும் காதலர் தினம் பரவியிருக்கிறது. இப்படி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த காதலர் தினம் உருவான கதை பலருக்கும் தெரியாமல் இருக்கின்றது. காதலர் தினம் உருவானது தொடர்பாக பல கதைகளை சொல்லப்பட்டாலும் உண்மையான வரலாற்றைப் பார்க்கும்போது வேலன்டைன் என்ற ஒரு போர்வீரருடைய இறந்த நாளைதான் காதலர் தினமாக கொண்டாட ஆரம்பித்தார்கள்.
கி.பி இரண்டாம் நூற்றாண்டில் ரோமானிய பகுதியை ஆட்சி புரிந்த க்ளரிஸ் நிமி என்ற மன்னன் தன்னுடைய படை வீரர்களுக்கு ஒரு கடுமையான சட்டத்தைப் பிறப்பித்தார். அவருடைய சட்டப்படி அரசு பணியில் இருக்கும் யாரும் காதல் திருமணம் செய்யக் கூடாது. அது மட்டுமில்லாமல் ஏற்கனவே திருமணமானவர்களும் தங்களுடைய மனைவியை விட்டுப் பிரிய வேண்டும் என்ற கடுமையான சட்டத்தை கொண்டு வந்தார். ஒரு வேலை இந்த சட்டத்தை மீறினால் அவர்களை பொது வெளியில் வைத்து கல்லால் அடித்து தலையை துண்டித்து கொலை பண்ண வேண்டும் என்ற உத்தரவையும் போட்டுள்ளார்.
அந்த சட்டத்தை வேறு வழி இல்லாமல் படை வீரர்கள் அனைவரும் கடைபிடித்த ஆரம்பித்துள்ளனர். ஆனால் வேலன்டைன் என்கிற ஒரு படை தளபதி மட்டும் அந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளார். அவர் எதிர்த்தது மட்டுமல்லாமல் படைவீரர்கள் பலருக்கும் மன்னருக்கு தெரியாமல் திருமணம் செய்து வைக்க ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த விஷயங்கள் அனைத்தும் மன்னனுக்குத் தெரியவந்துள்ளது. கோபம் அடைந்த மன்னர் வேலன்டைன் என்பவரை கைது செய்து மரண தண்டனை விதித்துள்ளார். மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னால் சிறிது நாள் வேலன்டைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் சிறையில் இருக்கும் போது வேலன்டைனுக்கும் மன்னருடைய மகள் அஸ்டோரியசுக்கும் எதிர்பாராத விதமாக காதல் மலர்ந்துள்ளது. வேலன்டைனை சிறையில் இருந்து தப்பிக்க வைப்பதற்கு அஸ்டோரியஸ் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எந்த பயனும் இல்லை. இது இறுதியாக கிபி 296 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வேலன்டைனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சிறிது நேரம் முன்பு வேலன்டைன் அஸ்டோரியஸுக்கு ஒரு அட்டையில் இறுதி காதல் கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார்.
இதுவே உலகத்தின் முதல் கிரீட்டிங் கார்ட் என்று சொல்லப்படுகிறது அதன்பின் வேலன்டைன் பொது வெளியில் வைத்து கல்லால் அடிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் இறந்த நாளான பிப்ரவரி 14ஆம் தேதியை அவரால் திருமணம் செய்து வைக்கப்பட்ட காதலர்கள் வேலன்டைன்ஸ் டே என்று கொண்டாட ஆரம்பித்தார்கள். அது காலப்போக்கில் காதலர் தினமாக மாறி உலகம் முழுவதும் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.