Categories
உலக செய்திகள்

காதலர் தினம் ஸ்பெஷல்… இலவச விவாகரத்து… சட்ட ஆலோசனை மையம் தரும் நூதன ஆஃபர்…!!

காதலர் தினத்தை முன்னிட்டு இலவசமாக விவாகரத்து பெற்று தரப்படும் என்று நூதன முறையில் ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.

காதலர் தினம் என்றாலே அனைவருக்கும் குஷிதான். காதலர்களை ஈர்ப்பதற்காக வணிகர்கள் தங்கள் நிறுவனங்களில் தள்ளுபடி, பரிசு, சிறப்பு சலுகைகள் என பலவித சலுகைகளை அள்ளித் தருவது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் ஒரு சட்ட ஆலோசனை மையத்தில் ஒரு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு திருமணமான தம்பதிகளுக்கு இலவசமாக விவாகரத்து பெற்று தரப்படும் என்பதாகும்.

இதற்காக விவாகரத்து செய்ய விரும்பும் தம்பதியினர் அவர்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை தெளிவாக ஒரு இமெயில் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் இமெயில்களை சரியான காரணங்களுக்காக பிரிய உள்ளனரா என்பதை ஆய்வு செய்த பின்னரே சட்ட ஆலோசனை மையத்தால் தேர்வு செய்யப்படுவர். இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் சட்ட ஆலோசனை மையம் இலவசமாக விவாகரத்து பெற்று தரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவாகரத்து பெற்று தருவதற்கு எந்த விதமான மறைமுக கட்டணமோ அல்லது கோர்ட் கட்டணமோ கிடையாது. மேலும் அனைத்து செலவுகளையும் சட்ட ஆலோசனை மையம் மூலமாகவே கட்டப்படும் என்பதை அவர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆண்டு காதலர் தினத்தன்று திருமணமாகியிருக்கும் தம்பதிகளை பிரிக்கும் விதமாக ஒரு சலுகையை அளித்த இந்த நிறுவனத்தை பார்த்து அனைவருக்கும் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

Categories

Tech |