Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வழக்கம்போல் நடைபெற்ற வாரச்சந்தை…. மொத்தம் 21 லட்சம் ரூபாய்…. விலைபேசிய விவசாயிகள்….!!

வழக்கம்போல் நடைபெற்ற பெருந்துறை வாரச்சந்தையில் 21 லட்ச ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை வாரச்சந்தை வழக்கம்போல் நடைபெற்றது. இந்த சந்தைக்கு பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரம், திருப்பூர் மாவட்டம் முத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது வெள்ளாடு ஒன்று 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செம்மறி ஆடு ஒன்று 4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெரும்பாலான விவசாயிகள் ஆடுகளை விலைபேசி பிடித்துச் சென்றனர். இவ்வாறு நடைபெற்ற வாரச்சந்தையில் ஆடுகள் மொத்தம் 21 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |