Categories
உலக செய்திகள்

வயிற்றுக்குள் இதுவா இருந்துச்சு…? அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்…. பாதிக்கப்பட்டவர் சொன்ன சொல்….!!

கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நபர் செல்போனை முழுங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்து நாட்டின் Aswan நகரில் 33 வயதுள்ள ஒரு நபருக்கு கடந்த 6 மாதங்களாக சாப்பிட்ட உணவு எதுவும் ஜீரணமாகாமல், உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் கடும் வயிற்று வலியால் சிரமப்பட்ட அந்த நபர் உடனடியாக Aswan University மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அந்த நபர் தனக்கு தொடர்ந்து வயிற்று வலி இருப்பதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் அந்த நபரின் வயிற்று மற்றும் குடல் பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது மொபைல் போன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அந்த நபரிடம் மருத்துவர்கள் கேட்டபோது “6 மாதத்திற்கு முன்பு தான் செல்போனை முழுங்கியதாகவும், அது எப்படியும் காலப்போக்கில் கழிப்பறைக்குச் சென்றால் சரியாகிவிடும்” என்று நம்பியதாக தெரிவித்துள்ளார். ஆனால் செல்போனை அவர் எதற்காக முழுங்கினார் என்பது குறித்து மருத்துவர்களிடம் சொல்லவில்லை. இந்நிலையில் அந்த நபருக்கு மேலும் ஆபத்து ஏற்படாமல் தவிர்ப்பதற்காக மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக அந்த மருத்துவமனையின் இயக்குநர் குழு தலைவர் Mohamed-El-Dahshoury  கூறியபோது ஒரு நோயாளி முழு தொலைபேசியை முழுங்கி இருப்பதை தான் முதல் முறையாக பார்க்கிறேன். அவர் உடல்நிலை குறித்து தற்போது எதுவும்  தெரியவில்லை. மேலும் அந்த நபர் விரைவில் முழுமையாக குணமடைவார்” என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார். இவ்வாறு அந்த நபர் முழுங்கிய போன் Nokiya 3310 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போன் மிகவும் பெரியதானது என்பதால் அந்த நபருக்கு உணவுகள் ஜீரணம் ஆகவில்லை. மேலும் போனில் இருக்கும் பேட்டரி அமிலம் அந்த நபரின் வயிற்றில் கசிந்து இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Categories

Tech |