வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அகிலா என்ற மகள் இருந்துள்ளார். இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். இதில் அகிலா அடிக்கடி வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அகிலாவிற்கு வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்து எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அகிலாவை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு தஞ்சை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அகிலா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.