தற்கொலை குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை 3.2 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. அதிலும் நாட்டில் அதிகம் தற்கொலை செய்பவர்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது குறித்து பல சமூக ஆர்வலர்களும், பல பிரபலங்களும் தற்கொலை தீர்வல்ல என்பது உள்ளிட்ட கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில்,
கவிஞர் வைரமுத்து இதுகுறித்து சற்று வித்தியாசமாக சிந்தித்து நல்லதொரு பதிவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தற்கொலையில் தமிழகம் இரண்டாமிடமாம். “மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு மரணம். மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு கொலை. மனிதன் சமூகத்தின் மீது காட்டும் எதிர்ப்பு தற்கொலை” தற்கொலையைத் தவிர்க்க அதன் காரணங்கள் களையப்பட வேண்டும். களைவோமா? என ட்விட் செய்துள்ளார்.
தமக்குத் தேவையானவற்றை இந்த சமூகம் நமக்கு வழங்கவில்லை என்ற விரக்தியில் தான் தற்கொலைகள் நிகழ்கின்றன. ஆகவே பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்ற வகையில் இந்த சமூகம் மாற்றப்பட வேண்டும் என்பதே அந்தப் பதிவின் விளக்கம்.