Categories
சினிமா தமிழ் சினிமா

“நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தால் வைகைப்புயல் வடிவேலு எடுத்த திடீர் அதிர்ச்சி முடிவு?…. என்னனு நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையால் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சில பிரச்சினைகளால் திரையுலகை விட்டு விலகி இருந்த வடிவேலு பிரச்சினைகள் எல்லாம் முடிவடைந்த நிலையில், நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று  வருகிறது.

இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் போதிய அளவு வரவேற்பை பெறாததால் நடிகர் வடிவேலு அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நடிகர் வடிவேலு இனி படங்களில் ஹீரோவாக நடிக்க போவதில்லை என்று முடிவெடுத்துள்ளாராம். மேலும் வழக்கம் போல் தன்னுடைய காமெடி ரோல்களில் மட்டும் வடிவேலு நடிப்பதற்கு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.

Categories

Tech |