பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமலாகி உள்ள நிலையில் முன்னதாக மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு புறப்படுவதால் வாகன நெரிசலால் பிரான்சிஸ் நகரம் ஸ்தம்பித்தது.
பிரான்சில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இரண்டாவது அலையடிக்க தொடங்கியுள்ளதால் அந்நாட்டில் இன்று முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் நேற்று அங்குள்ள மக்கள் அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
இதனால் தலைநகர் பாரிசில் நேற்று வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலை சந்தித்து. சுமார் 700 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காரின் விளக்குகளால் சாலைகள் நிரம்பி கிடக்க, எரும்பு ஊறுவதை போல வாகனங்கள் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றன. ஊரடங்கு அறிவிப்பை அடுத்து மக்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டு சென்றது இந்த நிலைக்கு காரணம்.