‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படம் குறித்து அசத்தலான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, பிக்பாஸ் ஷிவானி மற்றும் சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
Team #NaaiSekarReturns 🐕🦺🏃🏽♂️ returns 🛬 to Chennai after Wrapping up the 2nd Schedule at Mysore Palace 🏰
3rd Schedule to commence soon! 🔜#VaigaiPuyalVadivelu @Director_Suraaj @Music_Santhosh @iamshivani_n @UmeshJKumar @EditorSelva @proyuvraaj @teamaimpr ©️ 💯 Original pic.twitter.com/tW8xLconli
— Lyca Productions (@LycaProductions) March 15, 2022
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த படம் குறித்து அசத்தலான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் விரைவில் இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறியுள்ளனர்.