மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள தென்றல்நகர் பகுதியில் கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதனை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியபோது வடகிழக்கு பருவமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கும் நீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும்.
மேலும் மழைநீரில் சாக்கடை நீரும் கலந்து தேங்குவதால் நோய்கள் பரவும் அபாயம் இருக்கின்றது. ஆகவே பருவமழையால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு வருகின்ற 25-ஆம் தேதி வரை மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணி நடைபெறும் என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதன்படி இந்த மாவட்டத்தில் அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அப்போது பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் பிரபாகரன், முன்னாள் அறங்காவலர் குழுதலைவர் பிரகாஷ், முன்னாள் நகரசபை துணை தலைவர் செந்தில் உட்பட பெரும்பாலான கலந்து கொண்டனர். இதேபோன்று திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூய்மை செய்யும் பணியானது 5 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் முதல் பணியாக மன்னை சாலை, அகமுடையார் தெரு மற்றும் ஆட்டூர் சாலை பகுதியில் மரக்கிளைகள் அகற்றப்பட்டு, அங்கிருந்த கால்வாய்கள் மற்றும் மழைநீர் செல்லக்கூடிய வாய்க்கால்கள் நகராட்சி ஊழியர்கள் மூலம் தூய்மை செய்யப்பட்டது. அப்போது நகராட்சி ஆணையர் என்.சந்திரசேகரன் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன் உள்ளிட்ட பெரும்பாலானோர் இருந்தனர்.