ஜப்பான் நாட்டில் வடகொரியா அத்துமீறி நடத்திய ஏவுகணை சோதனையே எதிர்த்து ஜப்பான் மற்றும் அமெரிக்கா வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல்கள் நிலவி வருகின்றது. அதனால் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது தங்கையும் அமெரிக்காவுக்கு எதிரான கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் . இந்நிலையில் வடகொரியா, ஜப்பான் கடலில் தொலைதூரப் பாயும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. அதனால் ஜப்பானின் பிரதமர் சுகா யோஷி ஹைட் தனது கிழக்கு கடற்கரை பகுதியில் வடகொரியா 2பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தியுள்ளது என்று அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளார். அதனால் அமெரிக்கா மற்றும் ஜப்பான்ஆகிய நாடுகள் வடகொரியா மீதுஅத்துமீறி ஏவுகணை செலுத்தியதற்க்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்துவதாக ஏவுகணைகளை செலுத்திய வடகொரியாவுக்கு தடை விதித்துள்ளது. இதனையடுத்து மீண்டும் வடகொரியா குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய பாலிஸ்டிக் அல்லாத ஏவுகணையை இரண்டு நாட்களுக்கு முன்னர் மஞ்சள் கடலில் செலுத்தியாதல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது . அதுமட்டுமல்லாமல் தொலைதூரப் பாயும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தியது. மேலும் அமெரிக்க ராணுவத்தின் இந்தோ பசிபிக் தளபதி இந்த ஏவுகணை சோதனைகள் வடகொரியாவின் சட்டவிரோதமன ஆயுத திட்டம் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று கூறியுள்ளார்.