Categories
உலக செய்திகள்

என்ன…! வடகொரியாவில் நெருக்கடியான சூழலா…? அதிகாரிகளை கண்டித்த அதிபர்…. உண்மையை உடைத்த ஆராய்ச்சியாளர்….!!

கட்சித் தலைவர்களுடன் நடந்த சிறப்புக் கூட்டத்தில் உயர் அதிகாரிகளை வட கொரிய அதிபர் கடுமையாக கண்டித்துள்ளதாக அந்நாட்டின் பிரபல ஊடகம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் கட்சித் தலைவர்களுடன் நடந்த சிறப்பு கூட்டத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயர் அதிகாரிகளின் மீது கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதாவது அதிகாரிகளின் அலட்சியத்தாலயே மக்களின் பாதுகாப்பையும், நாட்டினுடைய பாதுகாப்பையும் உறுதி செய்வதில் மிகவும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை அந்நாட்டின் KCNA என்னும் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து KCNA வெளியிட்ட இந்த செய்தியினை வைத்து வடகொரியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால் தான் அதிபர் அவ்வாறு கொந்தளித்துள்ளதாக அந்நாட்டைவிட்டு வெளியேறிய ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |