கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்த பயணிகள் விமானத்தில் எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உருமாறிய கொரோனாவும் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்திற்கான ஒத்திகை இந்தியாவில் நடைபெற்றது. இதையடுத்து தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்துவதற்கு மத்திய அரசு கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு மருந்துக்கு அவசர ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து தடுப்பூசிகளை அனைத்து பகுதிகளுக்கும் விரைவில் எடுத்து செல்ல ஏற்ற வகையில் பயணிகள் விமானத்தில் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.