பிரான்சில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் அனைவரும் செலுத்தி கொள்ளும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் அனைவரும் செலுத்தி கொள்ளும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று Parti Socialistie (PS) கட்சியை சேர்ந்த செனேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரான்சில் கொரோனா தடுப்பூசி சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசி முதல் டோஸை பிரான்ஸ் நாட்டவர்கள் 50,673,917 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். இருப்பினும் கொரோனா தடுப்பூசியை நாட்டில் மீதம் உள்ளவர்களும் கட்டாயம் செலுத்திக் கொள்வதற்கு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று செனேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மக்கள் அனைவரையும் கொரோனா தடுப்பூசி பெற வைப்பதற்கு சுகாதார பாஸ் வாய்ப்பாக இருந்தது. ஆனால் தற்போது சுகாதார பாஸ் செயல்திறன் குறைந்து கொண்டே வருவதால் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான சட்டம் கொண்டுவர வேண்டும் என்று செனேட்டர் Bernard Jomier கூறியுள்ளார்.